கள்ளக்காதல்… மதுவில் விஷம்… ! 11 மாதங்களுக்குப் பின் சிக்கிய அத்தை – மருமகன்… வெளிவந்த அதிர்ச்சி பின்னணி…!!

By Soundarya on மாசி 1, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான கொலை வழக்கு, கள்ளத்தொடர்பு எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. தனது மருமகனுடன் இருந்த கள்ளத்தொடர்பைத் தடையின்றித் தொடர விரும்பிய மனைவி, அதற்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். இதற்காக மருமகனுடன் கைக்கோர்த்து, கணவன் குடித்த மதுவில் நைசாக விஷம் கலந்து கொடுத்துள்ளனர். மாரடைப்பு அல்லது இயற்க மரணம் என அனைவரும் நம்பிய நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு வந்த உடற்கூறு ஆய்வு முடிவுகள் கொலையை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

உள்ளுறுப்பு பரிசோதனை  அறிக்கையில் மதுவில் விஷம் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மனைவியும் மருமகனும் இணைந்து தீட்டிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. முறையற்ற உறவிற்காக ஒரு உயிரைப் பறித்த அந்தப் பெண்ணையும், அவருக்குத் துணையாக இருந்த மருமகனையும் போலீசார் கைது செய்துள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த ரகசியக் கொலை 11 மாதங்கள் கழித்து அம்பலமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.