தளபதி vs சென்சார் போர்டு…. பிப்ரவரி 13-ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ்?… குஷியான தளபதி ரசிகர்கள்…..!

By Nanthini on தை 31, 2026

Spread the love

சென்சார் போர்டின் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக படக்குழு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, சென்சார் போர்டு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டப்போராட்டங்களால் படம் வெளியாவது மேலும் தாமதமாகும் என்று ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் கசிந்துள்ளது.

அனைத்து சட்டச் சிக்கல்களையும் சுமூகமாக முடித்துவிட்டு, பிப்ரவரி 13-ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. காதலர் தின வார இறுதியில் அரசியல் பின்னணி கொண்ட இந்த அதிரடித் திரைப்படம் வெளியாவது வர்த்தக ரீதியாக பெரிய பலத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியாகும் இந்த அறிவிப்பு, படத்திற்காகக் காத்திருக்கும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.