பரபரப்பு திருப்பம்..! திமுக கூட்டணியில் பாமக..? ஸ்டாலின் – ராமதாஸ் ரகசிய Phone Call… விசிக எதிர்ப்புக்கிடையே முடிவாகும் கூட்டணி..!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பாமகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை திமுக தலைமை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அப்போது, தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை முதலில் முடித்துவிட்டு, அதன் பிறகு பாமகவுடனான கூட்டணி குறித்துப் பேசலாம் என ஸ்டாலின் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இந்தத் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக உள்ளிட்ட தற்போதைய கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்திய பிறகு, திமுக – பாமக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.