யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..!ஓபிஎஸ்-க்கு ஆளுநர் பதவி..? பாஜகவின் ‘மெகா’ பிளானால் பரபரக்கும் தமிழக அரசியல்…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தனது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொய்வடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவருக்கு ஆளுநர் பதவி வழங்குவது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அவரிடம் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், ஓபிஎஸ் மீண்டும் தங்களுடன் இணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று (ஜனவரி 29) காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஓபிஎஸ் தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.