BREAKING: வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி…? விஜய் பரபரப்பு அறிவிப்பு..!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழா வரும் பிப்ரவரி 2-ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இந்த விழாவில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த விழாவின் போது, 2026 தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே “கொள்கை எதிரிகளுடன் கூட்டணி இல்லை” என அறிவித்துள்ள நிலையில், இந்த விழாவில் கூட்டணி குறித்த கூடுதல் தெளிவு மற்றும் தேர்தல் நிலைப்பாடுகளை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.