BREAKING: இரவோடு இரவாக கூட்டணி முடிவை அறிவித்த பிரேமலதா…. காலையிலேயே அரசியலில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on தை 29, 2026

Spread the love

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தென்காசியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை உரிய நேரத்தில் தலைமை கழகம் வெளியிடும் என்று தெரிவித்துள்ளார். கட்சியின் கடைக்கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தே இந்த முறை கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும் என அவர் உறுதிபடக் கூறினார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வரும் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் தொண்டர்களிடையே விதைத்துள்ளார்.

கூட்டணி குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்து வரும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் தனது இறுதி முடிவை அறிவிக்கப் போவதாக பிரேமலதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதுவரை எந்தக் கட்சியுடனும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி உடன்பாடு எட்டப்படாத சூழலில், அவரது இந்த சமீபத்திய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் வியூகங்களை வகுத்து வரும் அவர், தொண்டர்களின் பலத்தோடு தமிழக அரசியலில் தேமுதிக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.