பழைய வாகனம் வாங்குவோர் கவனத்திற்கு…! 14 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் ஆபத்து… எஸ்.பி. எச்சரிக்கை…!!

By Devi Ramu on தை 28, 2026

Spread the love

பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை வாங்குவோர், அதனைச் சொந்தமாக்கிய 14 தினங்களுக்குள் தங்களின் பெயருக்கு உரிமையை (RC) மாற்ற வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இவ்வாறு பெயர் மாற்றம் செய்யத் தவறினால், முந்தைய உரிமையாளர் செய்த போக்குவரத்து விதிமீறல்கள், அபராதங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்குப் புதிய உரிமையாளரே பொறுப்பேற்க நேரிடும். மேலும், விபத்து காலங்களில் காப்பீடு (Insurance) பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என்பதால், ஆவணங்களை முறையாகப் புதுப்பிப்பது அவசியம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காகப் பழைய வாகனங்களை வாங்கும்போது, அவை திருடப்பட்டவையா அல்லது விபத்தில் சிக்கியவையா என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, வாகனத்தின் என்ஜின் பழுதுகள் மற்றும் மீட்டர் குறைப்பு போன்ற மோசடிகள் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். உரிய காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்படாத வாகனங்கள் குற்றச் செயல்களில் சிக்கியிருந்தால், சம்பந்தமில்லாத நபர்கள் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி வாங்கிய உடனே வாகனப் பதிவை மாற்றிவிட வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.