யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… EPS-ன் சொந்த மண்ணிலேயே திமுக போட்ட மெகா ஸ்கெட்ச்… அதிர்ந்து போன அரசியல் களம்….!

By Nanthini on தை 28, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மாற்றுக்கட்சியினரை வளைக்கும் படலத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மொத்தமாக திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, வரும் தேர்தலில் ஆளுங்கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்சித் தாவல் சேலம் மாவட்ட அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சேலத்தை தனது அரசியல் கோட்டையாகக் கருதி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு , அவரது சொந்த மாவட்டத்திலேயே இத்தனை பெரிய எண்ணிக்கையிலான தொண்டர்கள் திமுக பக்கம் சாய்ந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியில் விரிசலை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், சேலத்தில் திமுகவின் கரத்தை வலுப்படுத்தியுள்ளதுடன், அதிமுகவின் கோட்டை தகர்க்கப்படுகிறதா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.