“5 முறை கருக்கலைப்பு” ஜனசேனா எம்.எல்.ஏ மீது பெண் பகீர் பாலியல் குற்றசாட்டு.. வைரலாகும் வீடியோவால் ஆந்திர அரசியலில் பரபரப்பு…!!

By Soundarya on தை 28, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநில அரசு கொறடாவும், ரயில்வே கோடூர் தொகுதி ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ.வுமான அரவா ஸ்ரீதர் ராவ் மீது, ஒரு பெண்ணைத் ஏமாற்றி பாலியல் உறவு வைத்திருந்ததாக எழுந்துள்ள புகார் 2026 அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் மூலம் பழக்கமான அந்தப் பெண்ணை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 18 மாதங்களாக முறையற்ற உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், எம்.எல்.ஏ உடனான உறவில் அவர் கர்ப்பமடைந்ததாகவும், பின்னர் அது கட்டாயமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததை அடுத்து, தற்போது பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் ஆந்திரக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பொதுவாழ்வில் இருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.