அடுத்த அதிரடி….. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!

By Nanthini on தை 27, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பெண் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை அளித்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,000-த்தை, ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அது தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வரவிருக்கும் தேர்தலில் பெண்களைத் தான் நான் முழுமையாக நம்பி இருக்கிறேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் பெண்களின் பங்களிப்பு தீர்க்கமானதாக இருப்பதால், இரு கட்சிகளுமே பெண்களுக்கான நலத்திட்டங்களையும், நிதி உதவிகளையும் பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. குடும்பத் தலைவிகளின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையப்போவதை உணர்ந்துள்ள திராவிடக் கட்சிகள், தங்களின் தேர்தல் வியூகங்களைப் பெண்களை மையப்படுத்தியே வகுத்து வருகின்றன.