“வேலைக்கு போ…” கர்ப்பிணி மனைவிக்கு டார்ச்சர்… மறுத்ததால் கிணற்றில் வீசி நாடகமாடிய கணவர்… பதற வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on தை 27, 2026

Spread the love

திருநெல்வேலி அருகே தனது இரண்டு மாத கர்ப்பிணி மனைவியைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த அரசு ஊழியரான அந்தோணி என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணமான இத்தம்பதியிடையே, கூடுதல் வரதட்சணை கேட்டுத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மனைவியைப் பணிக்காக வெளியூர் செல்ல வற்புறுத்திய அந்தோணி, அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளார். தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஏற்பட்ட மோதலில், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு உடலைத் தோட்டத்துக் கிணற்றில் வீசியுள்ளார்.

பின்னர் தன் மனைவியைக் காணவில்லை என்று நாடகமாடிப் போலீசாரை ஏமாற்ற முயன்ற அந்தோணி, தீவிர விசாரணையில் வசமாகச் சிக்கிக் கொண்டார். கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சந்தேக மரணம் என வழக்குத் தொடுத்த நிலையில் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. மனைவியைச் சித்திரவதை செய்ததோடு திட்டமிட்டுக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அந்தோணி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விபரீத சம்பவத்தில் வேறு யாருக்கேனும் பங்கிருக்கிறதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.