” காத்திருக்கும் 50 ‘ரெட்’ தொகுதிகள்” கோட்டை விட்டால் தோல்வி உறுதி..? அதிர்ச்சி சர்வே முடிவால் மண்டை காய்ச்சலில் அறிவாலயம்… !!

By Soundarya on தை 27, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமை, பென் (PEN) நிறுவனத்துடன் இணைந்து ஷோ டைம் (Show Time) மற்றும் ஐபேக் (I-PAC) ஆகிய மூன்று நிறுவனங்களை ஆலோசனைக்காக நியமித்துள்ளது. அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் இந்த நிறுவனங்களை ஒப்பந்தம் செய்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை திட்டத்துடன் திமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் விளைவாக, அதிமுக வேறு வழியின்றி ஆந்திராவைச் சேர்ந்த ‘பிரமாண்யா’ (Pramanya) என்ற வியூக நிறுவனத்துடன் தற்போது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் இந்த நிறுவனங்கள் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகள் அறிவாலயத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. மொத்தம் உள்ள தொகுதிகளில் 45-ல் திமுகவின் வெற்றி உறுதி என்றும், தீவிரமாக உழைத்தால் மேலும் 50 தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சுமார் 50 தொகுதிகள் திமுகவிற்கு ‘ரெட் அலர்ட்’ எனப்படும் மிகவும் பலவீனமான தொகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள 89 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு மற்றும் உட்கட்சிப் பூசல்களைச் சரிசெய்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.