மராட்டிய மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உமர்கா பகுதியில் உள்ள தல்மோத் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த மோகன் ஜாதவ் என்ற அந்த காவல் அதிகாரி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்தார். சக அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பே உயிரிழப்பிற்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக இறுதிவரை பணியாற்றிய அந்த அதிகாரியின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
धाराशिव : झेंडावंदनासाठी उभे राहिले अन् हृदयविकाराचा झटका येऊन कोसळले, अधिकाऱ्याचा मृत्यू VIDEO pic.twitter.com/qgMulgPhWw
— Sumit Bhujbal (@SumitBhujb19648) January 26, 2026
