பாக்ஸ் ஆபீஸில் மாஸ்…!! இனி இந்தியில் கலக்கப்போகும் ஜீவா… ரீ-என்ட்ரியால் பாலிவுட்டில் எதிர்பார்ப்பு…!!

By Devi Ramu on தை 26, 2026

Spread the love

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம், மற்ற பெரிய படங்களை பின்னுக்குத் தள்ளி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு ஜீவாவிற்கு ஒரு சிறந்தகம்பேக்காக அமைந்துள்ள இப்படம், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ‘பொங்கல் வின்னர்’ என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வரும் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதை இந்தி மொழியில் ரீமேக்  செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, கதைக்களத்தில் உள்ள எதார்த்தமான சூழல் பாலிவுட் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதால் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இந்தி பதிப்பிற்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிக்கும் நட்சத்திரங்களைத் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் சத்தமில்லாமல் ஒரு சிறிய படம் பொங்கல் போட்டியில் வென்று, இப்போது வட இந்தியாவிற்கும் செல்வது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.