“ஊழல்” திமுக, அதிமுக-வைச் சாடிய விஜய்.. அந்த விவகாரத்தை கையில் எடுத்த ப்ளூ சட்டை மாறன்… விழிபிதுங்கி நிற்கும் தவெக..!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

மாமல்லபுரம் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஊழல் சக்திகள் என நடிகர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடும் எதிர்வினையாற்றியுள்ளார். ஊழலை நேரடியாகச் செய்யாவிட்டாலும், அது நடப்பதை வேடிக்கை பார்த்து அமைதியாக இருப்பதும் ஒருவகை ஊழல்தான் என்று அவர் சாடியுள்ளார். குறிப்பாக, பல ஆண்டுகளாகத் திரையரங்குகளில் நடைபெறும் ‘ப்ளாக் டிக்கெட்’ விற்பனை குறித்து விஜய் இதுவரை வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

தன்னுடைய எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், “இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது எனது ரசிகர்கள் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கவோ, விற்கவோ கூடாது என்று சொன்னதுண்டா?” என நறுக்கெனக் கேட்டுள்ளார். மேலும், அரசியலுக்கு வரும்போது இது போன்ற விஷயங்களைச் சொல்லும் தைரியம் விஜய்க்கு உண்டா என்றும் அவர் வினவியுள்ளார். ஊழலுக்கு எதிராக முழக்கமிடும் விஜய், தனது ரசிகர்களிடம் இருந்தே இந்த மாற்றத்தைத் தொடங்குவாரா என்பதே தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.