அரசியலில் நடக்கப்போகும் டுவிஸ்ட்..! வைரமுத்துவிடம் ரகசியம் பகிர்ந்த ரஜினிகாந்த்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 25, 2026) கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள வைரமுத்து, ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற பாடலின் வரிகளுக்கு இப்போதும் ரஜினிகாந்த்தான் ஒரு சிறந்த இலக்கியமாகத் திகழ்வதாகப் புகழ்ந்துள்ளார். சுமார் 80 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில் சினிமா, வாழ்க்கை முறை மற்றும் சமூகவியல் எனப் பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, வடநாட்டு அரசியல் நிலவரங்கள் குறித்தும், அங்கு விரைவில் நிகழப்போவதாகக் கருதப்படும் ஒரு முக்கிய அரசியல் திருப்பம் குறித்தும் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் தன்னை வியப்பில் நிமிர்ந்து உட்கார வைத்ததாக வைரமுத்து தெரிவித்துள்ளார். 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், ரஜினிகாந்தின் இந்த அரசியல் கணிப்புகள் மற்றும் வைரமுத்துவின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.