திருமணமான ஒரே வாரத்தில்… மனைவியின் நிச்சயதார்த்த பட்டு சேலையைக் காதலிக்குக் கொடுத்த கணவன்…! அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on தை 26, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும், அம்பரீஷ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணைக் காதலித்து வந்த அம்பரீஷ், திருமணத்திற்குப் பின்னரும் அந்தத் தொடர்பைத் தொடர்ந்ததுடன், தனது மனைவியின் நிச்சயதார்த்த பட்டுச் சேலையைத் தனது காதலிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த விவகாரம் நந்தினிக்குத் தெரியவரவே, அவர் மிகுந்த மனவேதனையுடன் தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறினார்.

இதனால் கோபமடைந்த நந்தினியின் குடும்பத்தினர் அம்பரீஷின் வீட்டிற்குச் சென்று அவரைச் சரமாரியாகத் தாக்கியதில், அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து அம்பரீஷின் தாய் அளித்த புகாரின் பேரில், சூர்யா நகர் போலீசார் இரு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே வாரத்தில் கணவரின் தகாத செயலால் ஏற்பட்ட இந்த மோதல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.