BREAKING: சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனுக்குக் கொலை மிரட்டல்… தவெக நிர்வாகி லெப்ட் பாண்டி மீது பாய்ந்தது வழக்கு..!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேனி தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வரும் பாண்டி (எ) லெப்ட் பாண்டி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி (நாதக) ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோரைப் பற்றி மிகவும் ஆபாசமாகப் பேசியதோடு, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட கிழக்குச் செயலாளர் ஜெயக்குமார், தேனி நகர காவல் நிலையத்தில் லெப்ட் பாண்டி மீது அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, லெப்ட் பாண்டி மீது ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக மற்றும் நாதக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மோதல் தற்போது சட்ட ரீதியான சிக்கலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லெப்ட் பாண்டியை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.