“அம்மா இல்லாத பொண்ணு.. அடிக்காதீங்க ப்ளீஸ்”… ஆசிரியரிடம் கதறி அழுத தந்தை…. கண்கலங்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on தை 26, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் பயந்துபோன தனது மகளுக்காக ஒரு தந்தை கண்ணீர் மல்க ஆசிரியரிடம் கெஞ்சும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி காண்போரை நெகிழச் செய்துள்ளது. தாய் இல்லாத தனது பெண் குழந்தையை மிகவும் பாசத்துடன் வளர்த்து வரும் அந்த தந்தை, பள்ளிக்குச் செல்ல அஞ்சிய மகளின் நிலையை கண்டு துடித்துப்போய், நேராக வகுப்பறைக்கே சென்றுள்ளார்.

அங்கு அந்த ஆசிரியர் முன் கை கூப்பி, கண்களில் நீர் ததும்ப, “தயவுசெய்து என் மகளை அடிக்காதீர்கள்” என்று அந்த தந்தை மன்றாடுகிறார். தனது மகளுக்குத் தாய் இல்லை என்றும், அவளைத் தான் ஒருவனாகவே கஷ்டப்பட்டு வளர்த்து வருவதாகவும், அவள் அழவதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

   

பெண் குழந்தைகளின் மீது தந்தையர் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பையும், தாய் இல்லாக் குழந்தையை வளர்ப்பதில் இருக்கும் அர்ப்பணிப்பையும் இந்த வீடியோ உணர்த்துகிறது. அதே வேளையில், பள்ளிகளில் குழந்தைகளைக் கையாள்வதில் ஆசிரியர்கள் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற விவாதத்தையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. மகளுக்காகத் தன்மானத்தையும் பார்க்காமல் ஒரு தந்தை கண்ணீர் விட்டுப் போராடும் இந்த வீடியோ, இணையவாசிகளின் இதயங்களை உருக்கியுள்ளது.