“2026-ல் விஜய்க்கு கிடைக்கும் வாக்குகள்”… திமுக, அதிமுக-வுக்கு செக் வைத்த க்ரோக்… அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றிய AI கணிப்பு….!

By Nanthini on தை 25, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவுத் தளமான ‘க்ரோக்’ (Grok), நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாய்ப்புகள் குறித்து வெளியிட்டுள்ள கணிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் எவ்வளவு சதவீத வாக்குகளைப் பெறும் என்ற கேள்விக்கு க்ரோக் சுவாரசியமான தரவுகளைப் பகிர்ந்துள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் பல்வேறு தரப்பு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, த.வெ.க தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் 25% முதல் 35% வரை வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாக க்ரோக் கணித்துள்ளது. கட்சியின் உள்கட்சி ஆய்வுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், சுயாதீன அரசியல் ஆய்வாளர்கள் 23% முதல் 40% வரை வாக்குகள் கிடைக்கலாம் எனக் கூறுவதையும் க்ரோக் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.

   

இருப்பினும், இந்த வாக்கு சதவீதம் என்பது தேர்தல் நேரத்தில் அமையப்போகும் கூட்டணிகள், வேட்பாளர் தேர்வு மற்றும் மக்களின் அப்போதைய மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தே இறுதி செய்யப்படும் என்றும் க்ரோக் எச்சரித்துள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் விஜய், ஒருவேளை 35% வாக்குகளைப் பெற்றால், அது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.