மகளை குட்கா வாங்க அனுப்பிய தந்தை… நாய் கடிக்கும் என 5 வயது சிறுமியை பயமுறுத்தி… 17 வயது சிறுவன் செய்த கொடூரம்…!!

By Soundarya on தை 25, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் 5 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை குட்கா வாங்கி வரச் சொன்னதால் பக்கத்திலுள்ள கடைக்குச் சென்ற சிறுமியை, அங்கிருந்த 17 வயது சிறுவன் தந்திரமாகப் பிடித்துள்ளான். உனக்கு பின்னால் நாய் நிற்கிறது, அது உன்னைக் கடிக்க வரும் என்று பொய் கூறி அச்சமுறுத்திய அந்தச் சிறுவன், நாயிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறி சிறுமியைப் பானை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பின்னர், சிறுமி கேட்ட குட்காவை அவளிடம் கொடுத்து அனுப்பிவிட்டான். வீட்டிற்குச் சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையைப் பெற்றோரிடம் விவரிக்க, அவர்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மஹுவா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவனைக் காவலில் வைத்துள்ளனர்.