தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்கள் தனக்கு வழங்கிய உயர்ந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் தனது குணம் எப்போதும் மாறாது என்று உருக்கமாகத் தெரிவித்தார். தான் அரசியலுக்கு வந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், ஒருபோதும் ஊழல் செய்ய மாட்டேன் என்றும், தனது கையில் ஒரு துளி ஊழல் கரை கூடப் படிய விடமாட்டேன் என்றும் அவர் உறுதிப்படக் கூறினார். பணத்தின் மீது தனக்கு எவ்வித ஆசையும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன் எனத் தெரிவித்தார்.
மேலும், இன்றைய அரசியல் சூழலில் கண் முன்னால் நடக்கும் முறைகேடுகளையும் ஊழல்களையும் தட்டிக்கேட்கும் தைரியம் தன்னிடம் மட்டுமே இருப்பதாக அவர் முழங்கினார். எதற்குமே ஆசைப்படாத ஒருவரால் மட்டுமே ஊழலை எதிர்த்துப் போராட முடியும் என்றும், அந்த நேர்மையே தனது பலம் என்றும் அவர் தொண்டர்களிடையே பேசினார். விஜய்யின் இந்த ஊழல் எதிர்ப்புப் பேச்சு 2026 தேர்தலுக்கான அவரது முக்கிய அரசியல் ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
