இப்படியா பண்ணுவாங்க…? ஃபெவிக்விக்கால் வாயை ஒட்டி ஷாக் கொடுத்த வாலிபர்…! இது காதலா…? வைரல் வீடியோ…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

தன் காதலை மெய்ப்பித்துக் காட்டுவதற்காக இளைஞர் ஒருவர் ‘ஃபெவிக்விக்’ திரவத்தைப் பயன்படுத்தித் தனது வாயை ஒட்டிக்கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் உயிரைப் பணையம் வைப்பது வேடிக்கையாகி விட்டது.

சமூக ஊடகப் புகழுக்காகவும், மற்றவர்களின் பார்வையைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய உயிரைப் பறிக்கும் செயல்கள் காதலோ அல்லது வீரமோ கிடையாது என்பதை இளைய சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும். விழிப்புணர்வு இன்றி எடுக்கப்படும் இது போன்ற தவறான முடிவுகள் தனிமனித வாழ்க்கையைச் சீரழிப்பதோடு, தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கிவிடும்.