கான்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியின் வீட்டிற்கு அவரைச் சந்திக்கச் சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பெண்ணின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது காதலனைக் காப்பாற்ற வேறு வழியின்றி வீட்டில் இருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் அமர வைத்து, வெளியே பூட்டுப் போட்டு மறைத்துள்ளார்.
यूपी | कानपुर में बॉयफ्रेंड अपनी गर्लफ्रेंड से मिलने के लिए उसके घर पहुंचा। उसी वक्त गर्लफ्रेंड के घर वाले आ गए। छिपाने के लिए गर्लफ्रेंड ने बॉयफ्रेंड को लोहे के बक्से में बंद कर दिया। बक्से से आहट हुई तो उसे खुलवाया गया, तब बॉयफ्रेंड बाहर निकला। पुलिस ने हिरासत में लिया। pic.twitter.com/W2I1CFOtQL
— Sachin Gupta (@SachinGuptaUP) January 23, 2026
இருப்பினும், பெட்டிக்குள் இருந்த இளைஞருக்குச் சுவாசிக்கச் சிரமம் ஏற்பட்டதாலோ அல்லது அசைவு காரணமாகவோ பெட்டிக்குள் இருந்து சத்தம் எழுந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இளைஞர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
