“சிங்கம் களத்துல இறங்கிடுச்சு” 468 நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் அதிரடி ஃபார்ம்..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகி வரும் இந்திய அணிக்கு வலுசேர்க்கும் விதமாக, நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது அபாரமான ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக ரன்கள் குவிக்கத் தடுமாறி வந்த சூர்யகுமார் யாதவ் (33 வயது), கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். குறிப்பாக, டி20 போட்டிகளில் அவர் அரைசதம் அடித்து 468 நாட்கள் ஆகியிருந்த நிலையில், அவரது ஃபார்ம் குறித்த கவலைகள் அதிகரித்திருந்தன.
நேற்று  நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களமிறங்கிய ‘SKY’, தனது வழக்கமான பாணியில் எதிர் தாக்குதல் நடத்தி அபாரமான அரைசதத்தைப் பதிவு செய்தார். இது இந்த வடிவத்தில் அவர் விளையாடிய 23 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு எடுத்த முதல் அரைசதமாகும். இதன் மூலம் உலகக் கோப்பைக்கு முன்பாகத் தனது பார்மை மீண்டும் நிரூபித்து, விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.