தவெக-வின் “விசில்” சின்னம் ராசியில்லாதது…? இந்த சின்னத்தில் போட்டியிட்ட அனைவருக்குமே தோல்வி… சரித்திரத்தை மாற்றி எழுதுவரா விஜய்..??

By Soundarya on தை 23, 2026

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு  இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், அது ஒரு ராசியில்லாத சின்னம் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக, கடந்த காலங்களில் இந்தச் சின்னத்தில் போட்டியிட்ட பிரபலங்கள் தோல்வியைத் தழுவியது சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜும், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மறைந்த நடிகர் மயில்சாமியும் இதே விசில் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

இதேபோல், ஆந்திர அரசியலிலும் இந்தச் சின்னம் பின்னடைவையே தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜெயபிரகாஷ் நாராயணனின் ‘லோக் சத்தா’ கட்சி விசில் சின்னத்தில் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில், விஜய் தனது கட்சியின் கொள்கைகளையும் மக்கள் செல்வாக்கையும் நம்பி இந்தச் சின்னத்தை வெற்றிகரமாக மாற்றிக்காட்டுவார் என அவரது தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.