திமுகவில் இணைந்த கையோடு வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த ஆதரவாளர்கள்… ஒரே நாளில் காலியான கூடாரம்…. செம குஷியில் எடப்பாடி….!

By Nanthini on தை 23, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில், அவரது அரசியல் கோட்டையில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. வைத்திலிங்கத்தின் இந்த முடிவால் அதிருப்தியடைந்த அவரது தீவிர விசுவாசிகளும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுமான தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இணைந்த கையோடு ஒரு பிரம்மாண்டமான இணைப்பு விழாவை நடத்தி, தனது பலத்தை நிரூபிக்க வைத்திலிங்கம் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவரது மிக நெருக்கமான ஆதரவாளர்களே மீண்டும் அதிமுக முகாமிற்குச் சென்றது அவருக்குப் பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. தனது சொந்த ஆதரவாளர்களையே தக்கவைக்க முடியாமல் வைத்திலிங்கம் தடுமாறி வருவது, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, தஞ்சாவூர் மாவட்ட அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.