“என்னை கொன்றாலும் வேறு ஆண்களோடு படுப்பேன்” மனைவி சொன்ன வார்த்தை… எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்கு வந்த கணவன் கண்ட கோலம்… “என்னை ஏமாத்திட்டா சார் அதான்” பரபரப்பு வாக்குமூலம்…!!

By Soundarya on தை 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் (22) மற்றும் ஸ்வேதா தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சந்தேகங்கள், அவர்களின் திருமண உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, நீதிமன்ற உத்தரவின் உதவியுடன் இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். தொடக்கத்தில் வேலை தேடி சூரத்திற்குச் சென்ற இவர்கள், பின்னர் கான்பூருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு சச்சின் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், ஸ்வேதாவின் வங்கிக் கணக்கிற்குத் தொடர்ந்து பணம் வந்ததைக் கண்டு சச்சின் சந்தேகமடைந்துள்ளார். இது குறித்து ஸ்வேதா அளித்த விளக்கம் சச்சினுக்குத் திருப்தி அளிக்காததோடு, அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாணவர்களுடனும் ஸ்வேதாவைத் தொடர்புபடுத்தி அவர் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளார்.

தனது மனைவி ஸ்வேதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சச்சின், அன்று இரவு தான் வீட்டிற்கு வரப்போவதில்லை என்று கூறிவிட்டு, எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது ஸ்வேதா வேறு இருவருடன் இருந்ததைக் கண்டுள்ளார் சச்சின் .அப்போது  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், ஸ்வேதா தன்னைக் கொன்றாலும் மற்ற ஆண்களுடன் தான் தங்குவேன் என்று  சொன்னதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற, சச்சின் அவளது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

   

பின்னர் சடலத்தைப் போர்வையால் சுற்றி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.  பல மணி நேர அலைச்சலுக்குப் பிறகு, குற்ற உணர்ச்சியால் சச்சின் தாமாகவே காவல் நிலையம் சென்று சரணடைந்தார். “நாங்கள் ஒருவருக்காக ஒருவராக வாழ்ந்தோம், ஆனால் அவர் என்னை ஏமாற்றியதால் கொலை செய்தேன்” என உருக்கமாகக் கூறித் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது சச்சின் கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.