காஜியாபாத், கோவிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில், உணவு தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரொட்டியின் மீது எச்சில் துப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 19, 2026 அன்று இரவு, கவிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அருவருப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
रेस्टोरेंट में थूक लगाकर रोटियां परोसने का वीडियो वायरल#viralvideo #restaurant #trending pic.twitter.com/PplCLQBNEV
— nowuttarpradesh (@nowuttarpradesh) January 22, 2026
அந்தக் கடையின் தொழிலாளியான பைசான் என்பவர், ரொட்டியில் எச்சில் துப்புவதைப் பார்த்த அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக அதனைத் தங்கள் மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவல் அறிந்த கவிநகர் போலீசார், சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று விசாரணை நடத்தி, சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கியதற்காகப் பைசான் மீது துரித நடவடிக்கை எடுத்துள்ளனர்.
