“கிரிக்கெட் ‘ஹிட்மேன்’ இனி டாக்டர் ரோஹித் சர்மா” கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம்…!!

By Soundarya on தை 22, 2026

Spread the love
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவுக்கு  மகாராஷ்டிராவின் அஜிங்கியா டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம்  கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ரோஹித் சர்மாவின் ஈடு இணையற்ற பங்களிப்பு மற்றும் அவரது முன்மாதிரியான தலைமைப் பண்பைப் பாராட்டி இந்த உயரிய கௌரவம் வழங்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ரோஹித் சர்மாவுக்கு இந்த டாக்டர் பட்டம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவுள்ளது.