உக்ரைனில் உள்ள வனவிலங்கு சரணாலயம் ஒன்றில், ‘சாடா’ (Chada) என்ற இமயமலைப் பழுப்புக் கரடி தனது நீண்ட கால குளிர்கால உறக்கத்தை (Hybernation) முடித்துக் கொண்டு வெளியே வந்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. சாடா கரடி சுமார் 5 முதல் 7 மாதங்கள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. குளிர்காலத்தின் கடுமையைத் தாங்கிக் கொள்ள கரடிகள் மேற்கொள்ளும் இயற்கையான நடைமுறை இதுவாகும். இந்த நீண்ட உறக்கத்தின் போது கரடிகள் உணவு ஏதும் உட்கொள்ளாது. அவற்றின் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புச் சத்து மட்டுமே இந்த காலக்கட்டத்தில் உயிர்வாழத் துணையாக இருக்கும்.
7 மாத தூக்கம் முடிந்தது! 🐻💤
உக்ரைன் சரணாலயத்தில் ‘சாடா’ இமயமலைப் பழுப்புக் கரடி, நீண்ட ஹைபர்நேஷன் பிறகு முதன்முறையாக வெளியில்.
5–7 மாதங்கள் உணவில்லாமல், கொழுப்பு மட்டுமே துணை.
👉 இயற்கையின் அதிசயம் 🌿 pic.twitter.com/RehOt4n5DB— Aadhavan® (@aadaavaan) January 21, 2026
நீண்ட நாட்களுக்குப் பிறகு குகையை விட்டு வெளியே வந்த சாடா, வெளிச்சத்தைக் கண்டு கண்களைச் சிமிட்டியபடி மெதுவாக நடக்கும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளன. இயற்கையின் இந்த விந்தையான உயிர்வாழும் தந்திரத்திற்கு சாடாவின் இந்த வருகை ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
