நள்ளிரவில் நடந்த பயங்கரம்…! மதுபோதையில் நண்பனை வெட்டிக் கொன்ற ஆட்டோ டிரைவர்…! பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on தை 21, 2026

Spread the love

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே சுரேஷ் என்ற கேட்டரிங் தொழிலாளி மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். மதுபான கடையில் சுரேஷுக்கும் அவரது நண்பரான தமிழ்ச்செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியயது. இந்த நிலையில் மதுக்கடை மூடப்பட்ட பிறகு வெளியே படுத்திருந்த சுரேஷை தமிழ்ச்செல்வன் அரிவாளால் வெட்டியுள்ளார். கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாக இருந்த தமிழ்ச்செல்வனைத் தேடிப்பிடித்துக் கைது செய்தனர். ஒரு சிறிய வாய் தகராறு கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.