அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று முறைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த முடிவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டிடிவி தினகரனின் இந்தச் சேர்க்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டணிகளை உருவாக்குவதாகக் குற்றம்சாட்டினார். டிடிவி தினகரனை மிரட்டித்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்துள்ளார்கள் என்றும், யார் மீதெல்லாம் வழக்குகள் நிலுவையில் உள்ளதோ அவர்களை அச்சுறுத்தி தங்கள் பக்கம் இழுப்பதையே பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் சாடியுள்ளார்.
