அடச்சீ, இப்படி ஒரு வினோத திருடனா?… பெண்களின் உள்ளாடைகளை திருடி அவர் செய்த ‘அந்த’ காரியம்… சென்போனை பார்த்து அதிர்ந்த போலீசார்….!

By Nanthini on தை 21, 2026

Spread the love

பெங்களூருவில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அவற்றை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு வித்யாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு உலர்த்தப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடைகளை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான அமல் என்.ஜி. என்பது தெரியவந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி பெங்களூரு வந்த இவர், தனது நண்பரின் அறையில் தங்கி வந்துள்ளார். பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் இவர், வீடுகளுக்கு வெளியே காயப்போடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது அம்பலமானது.

   

அவரது செல்போனை ஆய்வு செய்த போலீஸார், அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கண்டறிந்தனர். தான் திருடிய உள்ளாடைகளை அவர் அணிந்து கொண்டு, செல்பி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது அறையில் சோதனை நடத்தியதில், சுமார் 20 ஜோடி பெண்களின் உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வினோத திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஹெப்பகோடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரைக் கைது செய்துள்ளனர்.