போடு ரகிட ரகிட…. நகைக்கடன் விதிகளில் அதிரடி மாற்றம்… மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!

By Devi Ramu on தை 21, 2026

Spread the love

இந்தியாவில் அவசர நிதித் தேவைகளுக்காகத் தங்கத்தை அடமானம் வைக்கும் பழக்கம் மக்களிடையே அதிகம் உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் நகைக்கடன் விதிகளில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வங்கிகளுக்கு நிகராகத் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் (முத்தூட், மனப்புறம் போன்றவை) முன்னுரிமைத் துறை அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இத்தகைய சலுகைகள் நிதி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நகைக்கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. இது குறிப்பாகக் கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் சிறு தொழில்களுக்காகக் கடன் வாங்குபவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

   

மேலும், நவீனத் தொழில்நுட்பமான யுபிஐ (UPI) மூலம் தங்கம் சார்ந்த கடன் வசதிகளை அறிமுகப்படுத்தவும், 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகக் கடன் வாங்குபவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி கொண்டு வந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த பட்ஜெட்டில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

   

மருத்துவச் செலவுகள் மற்றும் கல்விக்காகத் தங்கள் நகைகளை அடகு வைக்கத் திட்டமிடுபவர்கள், இந்த பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு கடன் பெறுவது அதிக லாபகரமானதாக இருக்கும். இந்த மாற்றங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.