பொங்கல் விளையாட்டு போட்டியில் ரத்த களறி…! சமாதானம் செய்யப்போன நபர் குத்திக் கொலை… திருச்சியில் பரபரப்பு…!

By Devi Ramu on தை 19, 2026

Spread the love

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தேவானூர் புதூர் கிராமத்தில், காணும் பொங்கலை முன்னிட்டு நடந்த விளையாட்டுப் போட்டி பயங்கரமான கொலையில் முடிந்தது. நேற்று இரவு அங்கு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியின் போது, இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது சண்டையை விலக்கிவிட்டு சமாதானம் செய்ய முயன்ற கார்த்திக்ராஜா (38) என்பவரை, ஆத்திரமடைந்த சக்திவேல் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரும் கத்தியால் மார்பில் குத்தினர்.

கத்திக் குத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக்ராஜாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கொலையாளிகளான சக்திவேல் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.