ஷாக்.! ரசிகரை தகாத வார்த்தையால் திட்டிய அர்ஷ்தீப் சிங்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய வீடியோ…!!

By Soundarya on தை 19, 2026

Spread the love

இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ரசிகர் ஒருவரை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் விராட் கோலி சதம் விளாசிய போதிலும், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. களத்தில் எல்லைக் கோட்டிற்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் கூறிய கருத்தால் ஆத்திரமடைந்த அர்ஷ்தீப் சிங், அவரை நோக்கி கடினமான சொற்களைப் பயன்படுத்திப் பதிலடி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், அர்ஷ்தீப் சிங் ஆதரவு ஊழியர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பதும், திடீரென ரசிகர் ஒருவரின் கருத்தைக் கேட்டு கோபமடைந்து “சுப் பே…” எனத் தொடங்கும் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையைச் சொல்வதும் பதிவாகியுள்ளது. அந்த ரசிகர் என்ன பேசினார்? என்பது வீடியோவில் தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும், அர்ஷ்தீப்பின் எதிர்வினை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியின் விரக்தியில் இருந்த இந்திய அணி வீரரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.