போடு ரகிட ரகிட..! புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு… தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!

By Soundarya on தை 19, 2026

Spread the love

தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் 50 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மீதமுள்ள விண்ணப்பங்கள் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ள நிலையில், தகுதியுள்ள நபர்கள் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களின் இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் டிஎன்பிடிஎஸ் இணையதளம் வாயிலாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்கள் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்குச் சென்றும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான குடும்பங்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.