வாழைப்பழத்தை காணோம் எங்கே..? சண்டை முற்றியதில் ஹோட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை… கொலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!

By Soundarya on தை 18, 2026

Spread the love
வங்கதேசத்தின் காசிப்பூர் பகுதியில் ஒரு கொத்து வாழைப்பழம் காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. மசும் மியா என்பவரது தோட்டத்தில் காணாமல் போன வாழைப்பழங்கள், லிடன் சந்திர கோஷ் (55) என்பவரது ஹோட்டலில் இருப்பதைக் கண்டறிந்த உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் வன்முறையாக மாறியதில், ஹோட்டல் உரிமையாளர் லிடன் சந்திர கோஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய ஸ்வபன் மியா, அவரது மனைவி மஜீதா கதுன் மற்றும் அவர்களது மகன் மசும் மியா ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். ஒரு சாதாரண வாழைப்பழத் திருட்டு விவகாரத்தில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.