உங்க வீட்டுத் தோட்டத்தில் இந்த மரம் இருக்கா…? அப்போ உஷார்…! பாம்புகளைக் கவரும் செடிகள் இதுதானாம்…!

By Devi Ramu on தை 18, 2026

Spread the love

அழகுக்காக வீட்டின் முன்பும் தோட்டத்திலும் நாம் வளர்க்கும் சில தாவரங்கள், பாம்புகள் தங்குவதற்கு ஏற்ற இடங்களாக மாறக்கூடும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, வாழைமரத்தின் அகலமான இலைகளும் அதன் அடிப்பகுதியில் எப்போதும் இருக்கும் ஈரப்பதமும் பாம்புகளை வெகுவாக ஈர்க்கின்றன. அதேபோல், அடர்ந்த கிளைகளைக் கொண்ட மல்லிகை, தேவதாரு மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் பாம்புகளுக்குப் பாதுகாப்பான நிழலையும், தவளை, எலி போன்றவை ஒரே இடத்தில் இருப்பதால், அவை தங்குமிடங்களாக மாற வாய்ப்புள்ளது.

வீட்டின் நுழைவாயில் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஹோஸ்டா போன்ற அகலமான இலைகள் கொண்ட செடிகளை வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. தோட்டத்தைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் விஷ ஜந்துக்கள் வருவதைத் தடுக்கலாம். அடர்ந்த புதர்களை அகற்றி, இரையைத் தேடி வரும் சிறு உயிரினங்கள் அண்டாமல் கவனித்துக் கொள்வது அவசியம். இயற்கையை நேசிக்கும் அதே வேளையில், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் செடிகளை வளர்ப்பதே மனித உயிருக்கு பாதுகாப்பானது.