BIG NEWS: சற்றுமுன் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்… செம குஷியில் இபிஎஸ்…!

By Nanthini on தை 18, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் மிகப்பரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்திய முக்கியச் செய்தியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அதிமுக கூட்டணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில், எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். ஏற்கனவே பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், மேலும் சில முக்கியக் கட்சிகள் விரைவில் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து தனது ஆதரவை கூறியுள்ளார். இந்த ஆதரவு, தென் மாவட்டங்களில் இது அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.