விளையாட்டு விடுதியில் கேட்ட மரண ஓலம்… 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கதி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!

By Nanthini on தை 18, 2026

Spread the love

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள இந்திய விளையாட்டு கழக (SAI) விடுதியில், கபடி வீராங்கனை சாண்டிரா ஏ (18) மற்றும் தடகள வீராங்கனை வைஷ்ணவி (15) ஆகிய இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் மேல் தளத்தில் இவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்த வைஷ்ணவி, சம்பவத்திற்கு முதல் நாள் தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாகத் தனது தந்தையிடம் மகிழ்ச்சியுடன் பேசியுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மற்றொரு வீராங்கனையான சாண்டிரா, இந்த விடுதி ஒரு சிறைச்சாலை போல இருப்பதாகத் தனது பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தந்தை வேணு கூறுகையில், தனது மகளைப் பார்ப்பதற்கு அதிகாரிகள் நீண்ட நேரம் அனுமதி மறுத்ததாகவும், எம்.பி. மற்றும் போலீஸ் கமிஷனர் வந்த பின்னரே உள்ளே விடப்பட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். தற்போது கொல்லம் நகர போலீசார் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து, விடுதியில் தங்கியுள்ள சக மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இளம் வீராங்கனைகளின் மரணம் விளையாட்டுத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.