“உல்லாசமாக இருந்துவிட்டு கழற்றிவிட்ட கள்ளக்காதலி”… 40 வயது காதலியை கழுத்தை நெரித்துக் கொன்ற 67 வயது முதியவர்….!

By Nanthini on தை 18, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் 40 வயது பெண் ஒருவரை 67 வயது முதியவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிரேபதாசலகி கிராமத்தைச் சேர்ந்த எமனவ்வா என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீசைலா பட்டீல் என்ற முதியவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், எமனவ்வா அந்த முதியவருடனான தொடர்பைத் துண்டித்துவிட்டு, 27 வயது இளைஞர் ஒருவருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலா பட்டீல், தனது காதலி வேறொருவருடன் நெருக்கமாக இருப்பதை ஜீரணிக்க முடியாமல் அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஸ்ரீசைலா பட்டீலின் தோட்டத்து வீட்டிற்கு எமனவ்வா வந்தபோது, மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற முதியவர், எமனவ்வாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி ஊர் மக்களிடம் நாடகமாடியுள்ளார். இருப்பினும், போலீசாரின் விசாரணையிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றத்தை ஒப்புக்கொண்ட முதியவர் ஸ்ரீசைலா பட்டீலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.