பழைய ஈமெயில் ஐடி பிடிக்கலையா…? டேட்டா அழியாமலேயே புது முகவரி பெறலாம்…. கூகுளின் அதிரடி மாற்றம்…!!

By Devi Ramu on தை 18, 2026

Spread the love

பல ஆண்டுகளாக ஜிமெயில் முகவரியை மாற்ற முடியாது என்ற நிலையை மாற்றி, பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப புதிய Username அமைத்து கொள்ளும் வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. தொழில்முறை தேவைகளுக்காக பழைய மின்னஞ்சல் ஐடியை மாற்ற நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இந்த மாற்றத்தைச் செய்யும்போது உங்களின் பழைய மின்னஞ்சல்கள், கூகுள் டிரைவ் கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் போன்ற எந்தத் தரவுகளும் அழியாது என நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இருப்பினும், இந்த வசதிக்குச் சில முக்கியக் கட்டுப்பாடுகளைக் கூகுள் விதித்துள்ளது. ஒரு பயனர் தனது வாழ்நாளில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியும். மேலும், ஒருமுறை ஐடியை மாற்றினால் அடுத்த ஒரு வருடத்திற்கு மீண்டும் மாற்ற முடியாது என்பதால், புதிய பெயரைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். கூகுள் கணக்கின் தனிப்பட்ட தகவல் பகுதிக்குச் சென்று இந்த மாற்றத்தைச் செய்து கொள்ளலாம்.இந்த வசதி தற்போது படிப்படியாகப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.