“பெற்றோரை மீறி திருமணம் செய்த பெண்…” முகம் சிதைந்து கிடந்த உடல்… கணவரின் செயலால் பரிதவிக்கும் 2 பிள்ளைகள்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on தை 18, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பூங்கொடி என்ற இளம்பெண், மொண்டிக்காட்டு தோட்டப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலேயே பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அங்கமுத்து என்பவரைக் காதலித்து மணம் முடித்த பூங்கொடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகத் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மதுப் பழக்கத்திற்கு அடிமையான அங்கமுத்து தனது மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ரத்தக் காயங்களுடன் பூங்கொடியின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் இது கொலையாக இருக்கலாம் எனப் போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது.

   

தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பூங்கொடியின் கணவர் அங்கமுத்துவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குடும்பத் தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் தனது மனைவியைத் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

   

தற்போது அங்கமுத்துவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இந்தத் திட்டமிட்ட கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசை ஆசையாகக் காதலித்து கரம் பிடித்த மனைவியையே கணவன் ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது