“நாங்கதான் OG.. நீங்க வெறும் ஸ்டிக்கர்”… திமுகவுக்கு எடப்பாடியின் பதிலடி… நல்லா கதறுங்க அமைச்சர்களே..!

By Nanthini on தை 18, 2026

Spread the love

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் திமுகவின் திட்டங்களைப் பார்த்து நகலெடுக்கப்பட்டவை என்று ஆளும் திமுக அமைச்சர்கள் விமர்சித்த நிலையில், அதற்கு அதிமுக ஐடி விங் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கடும் பதிலடி கொடுத்துள்ளனர். “மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே ஒரிஜினல் (OG) சொந்தக்காரர்கள் அதிமுக தான்” என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாகவும், தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவின் திட்டங்களை காப்பி எனச் சொல்வது வேடிக்கையாக இருப்பதாகவும் சாடியுள்ளனர்.

திமுகவின் பல திட்டங்கள் அதிமுகவின் முந்தைய திட்டங்களின் ‘சீப் காப்பி’ (Cheap Copy) என்று விமர்சித்துள்ள அதிமுகவினர், இதற்குச் சான்றாக பல உதாரணங்களை அடுக்கியுள்ளனர். அம்மா மருந்தகம் ‘முதல்வர் மருந்தகம்’ எனவும், அம்மா மினி கிளினிக் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனவும், தாலிக்கு தங்கம் திட்டம் ‘புதுமைப் பெண்’ திட்டம் எனவும் பெயர் மாற்றப்பட்டு அல்லது உருமாற்றப்பட்டு செயல்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மகளிருக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு 2021 தேர்தலிலேயே அதிமுகவால் அறிவிக்கப்பட்டது என்றும், அதனைப் பின்பற்றியே திமுக ரூ.1000 அறிவித்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

   

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால் அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், அதன் பயத்தினாலேயே திமுக அமைச்சர்கள் ரகுபதி மற்றும் டி.ஆர்.பி. ராஜா போன்றோர் அதிமுகவை விமர்சிப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. திமுக அரசு தனது சாதனையாகச் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்று விமர்சித்துள்ள அதிமுக, “நல்லா கதறுங்க அமைச்சர்களே.. இன்னும் 2 மாதங்கள் தான் இருக்கிறது” எனத் தேர்தல் வெற்றியை இலக்கு வைத்துத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.