1500 குழந்தைகளை மீட்ட பெண் சிங்கம்…! யார் இந்த சந்தனா சின்ஹா…? ரியல் இன்ஸ்பிரேஷன் இவங்கதான்…!!

By Devi Ramu on தை 18, 2026

Spread the love

சத்தீஸ்கரில் பிறந்து வளர்ந்த சந்தனா சின்ஹா, சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த பெண் காவல்துறை அதிகாரியின் உத்வேகத்தால் 2010-ம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு படையில் (RPF) இணைந்தார். 2022-ம் ஆண்டு புதுடெல்லி ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒரு தாயையும் குழந்தையையும் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டது இவரது பணியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இதன் தொடர்ச்சியாக, கடத்தப்படும் மற்றும் வழிதவறும் குழந்தைகளைக் காப்பாற்ற 2024-ம் ஆண்டில் ‘நன்ஹே ஃபரிஸ்தே’ என்ற மீட்புக் குழுவை உருவாக்கி, ரயில்வே நெட்வொர்க் வழியாகக் கடத்தப்படும் சிறுவர்களை மீட்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தனது குழுவின் மூலம் பத்திரமாக மீட்டெடுத்துப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

   

இதில் 152 குழந்தைகளைச் சந்தனா நேரடியாகக் களத்தில் இறங்கி மீட்டது குறிப்பிடத்தக்கது. இவரது தன்னலமற்ற மற்றும் வீரமிக்கச் சேவையைப் பாராட்டும் வகையில், இந்திய ரயில்வேயின் மிக உயரிய விருதான ‘அதி விஷிஷ்த் ரயில் சேவா புரஷ்கார்’ சமீபத்தில் இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது 41 வயதாகும் சந்தனா சின்ஹா, ரயில்வே துறையில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து ‘பெண் சிங்கம்’ எனப் போற்றப்படுகிறார்.