FLASH NEWS: 11 பேருடன் சென்ற அரசு விமானம் மாயம்… விபத்துக்குள்ளானதா..? பெரும் அதிர்ச்சி..!!

By Soundarya on தை 18, 2026

Spread the love

இந்தோனேசியாவின் மக்காசர் அருகே 11 பேருடன் சென்ற ‘ATR 42-500’ ரக மீன்வளத்துறை விமானம் விபத்துக்குள்ளான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்த இந்த விமானம், மலையில் மோதி சிதறிக் கிடப்பதை வீடியோ ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அது கடலுக்கு மேலே மிகவும் குறைந்த உயரத்தில் பறந்ததே ரேடார் பார்வையில் இருந்து விலகக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.