சற்றுமுன் அதிமுகவில் மீண்டும் இணைந்த முக்கிய புள்ளி… பொங்கல் திருநாளில் செம குஷியில் இபிஎஸ்…!

By Nanthini on தை 15, 2026

Spread the love

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அதிமுக 2026 ஆம் ஆண்டு வெற்றிவாகை சூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல வியூகங்களை வகுத்து வருகின்றார்.

அதேசமயம் அதிமுகவில் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கட்சியிலிருந்து தூக்கி வீசி வருகிறார். சமீபத்தில் கூட மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கட்சியில் கூட்டணி முடிவுகளையும், மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியையும் இபிஎஸ் தீவிர படுத்தியுள்ளார்.

   

இந்நிலையில் தை பிறந்த முதல் நாளிலேயே அதிமுகவை நோக்கி முக்கியத் தலைவர் நகர்ந்து இருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் பணியை இபிஎஸ்  தீவிரப்படுத்தி இருந்தார். அந்த வகையில் இன்று, அமமுக மாநில அமைப்பு செயலாளர் மாதவரம் தட்சிணாமூர்த்தி, இபிஎஸ் முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.