தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைய வேண்டும் என்றும், நலமும் வளமும் பெருக வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள விஜய், தனது வாழ்த்துச் செய்தியில் “வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருப்பது அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவர் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் தமிழக மக்களுக்கு, இந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமையும் வகையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் அமையட்டும் என்று அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!— TVK Vijay (@TVKVijayHQ) January 15, 2026
